National Tamil Academy Logo – Online Tamil Education and Tholkappiyam Training

ஐந்திணை தேசியத் தமிழ்க் கல்விக் கழகம் (Ainthinai National Tamil Academy) ஓர் இணைய வழி பயிற்சிக் கழகம். இக் கல்விக் கழகம் உலகளவில் தமிழ்க் கல்வி வளர்ச்சி மற்றும்  வேலை வாய்ப்புக்கான திறன் சார் பயிற்சிகளை வழங்கி மனிதவள மேம்பாட்ட்டிற்கு வழி வகுத்து வருகின்றது.

தமிழ்மொழித் திறன்கள் சார்ந்த மேம்பாட்டுப் பயிற்சிகள், பிழையின்றி தமிழ் எழுதுவதற்கான இலக்கணப் பயிற்சிகள், மொழியியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தொல்காப்பியப் பயிற்சி, தமிழ் குரலிசைப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் மூலம் தமிழ்மொழி – இலக்கிய ஆற்றலை மேம்படுத்த உறுதுணை புரிந்து வருகின்றது. இத்துடன் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தமிழ்மொழிக் கற்றல் – கற்பித்தலுக்கான செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மற்றும் தொழி நுட்பப் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது.

மேலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள்(TNPSC, UPSC, TRB, NET), வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், உள் நாட்டிலும் அயல் நாட்டிலும் உயர்கல்வி சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் மூலம் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை ஒருங்கிணைத்து வழங்கி வருகின்றது.

Powered by Joinchat